Tuesday, 22 March 2016
Sunday, 6 March 2016
முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?
சுதேசமித்திரன் வெளியிட்ட புகைப்படம் அதில் இந்தி எதிர்ப்பாளர் கோஷ்டியின் தலைவர் என்பதை குறிப்பிட்டிருப்பதை கவனிக்கவும் |
அகில இந்தியாவிற்குமான முதல்
தலித் பெண் தலைவர் யார்..?
முதல் இந்தி எதிர்ப்பு •
சென்னை மாகாண பிரதம அமைச்சர் ராஜாஜி 1937 ஆகஸ்ட் 10ம் நாளன்று இந்தி மொழி கட்டாயமாக்கப்படும்
என்று அறிவித்தார். அது மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் அது ஒருங்கிணைக்கப்படவில்லை
இதை பயன்படுத்திக் கொண்ட ராஜாஜி 21.04.1938 அன்று ஓர் ஆணையை பிறப்பித்து பள்ளிகளில்
கட்டாய இந்தி மொழியைக் கட்டாயமாக்கினார். எல்லோரும் கொதித்தார்கள். ஆனால் யார் தொடங்குவது
என்பதில் ஏனோ தயக்கம் இருந்தது. இந்த தயக்கத்தை முதலில் உடைத்தவர் அன்னை மீனம்பாள்
அவர்கள். (காண்க பேட்டி). அதன் தொடர்ச்சியாய் சென்னை தி.நகரில்
நடத்தப்பட்ட முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புக் கூட்டம் தந்தை சிவராஜ் தலைமையில் நடந்தது. அந்த வரலாற்றுக் சிறப்புமிக்க கூட்டத்தையும் போராட்டதையும் தனது வீர உரையால் தொடங்கி வைத்தவர் அன்னை மீனாம்பாள் அவர்கள். (கொடுக்கப்பட்ட படத்தில் தி நகரில் நடைபெறும் முதல் இந்தி எதிர்ப்பு கூட்ட மேடையில் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தந்தை சிவராஜ். கீழே அமர்ந்திருப்பவர் அன்னை மீனாம்பாள், மைக் முன் பேசுபவர் சி.என்.அண்ணாதுரை அவர்கள்)
நடத்தப்பட்ட முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புக் கூட்டம் தந்தை சிவராஜ் தலைமையில் நடந்தது. அந்த வரலாற்றுக் சிறப்புமிக்க கூட்டத்தையும் போராட்டதையும் தனது வீர உரையால் தொடங்கி வைத்தவர் அன்னை மீனாம்பாள் அவர்கள். (கொடுக்கப்பட்ட படத்தில் தி நகரில் நடைபெறும் முதல் இந்தி எதிர்ப்பு கூட்ட மேடையில் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தந்தை சிவராஜ். கீழே அமர்ந்திருப்பவர் அன்னை மீனாம்பாள், மைக் முன் பேசுபவர் சி.என்.அண்ணாதுரை அவர்கள்)
குடியரசு இந்தியாவின் 18 கோடி கொடூரம்..
கௌதம சன்னா
வெள்ளையரிடமிருந்த கைமாறிய இந்தியா குடியரசாகி 67ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இத்தனை ஆண்டுகளில் தலித் மக்கள் மீது இந்த சாதிய பைத்தியம் பிடித்தவர்கள் நடத்திய தாக்குதல்கள், கொலைகள் உள்ளிட்ட குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 18 கோடிக்கு மேல்.. இவற்றை மைய அரசின் குற்றவியல் ஆணவ மையம் தொகுத்துள்ளது. ஆனால் அரைகுறையாக.. அப்படி தொகுக்கப்பட்டவைகள் மொத்தமாக தொகுத்து புள்ளிவிவரங்களைக் கொண்டு ஒரு பட்டியலைத் தயாரித்தேன். தோராயமானதுதான்.. ஏனெனில் அரசிடம் இருப்பதும் தோராயமே. சேர்க்கப்படாத குற்றங்களின் எண்ணிக்கை இன்னும் இரண்டு மடங்கு இருக்கும் என்கிற புரிதலோடு இதைப் பாருங்கள். குடியரசு இந்தியாவின் கோரம் புரியும்.
அம்பேத்கர் பேரூந்து... (ஏலம் கேட்கலாமா)
என் கல்லூரி நாள்களில் சென்னை மாநகர் அம்பேத்கர் பேரூந்தில் பயணம் செய்தபோது நான் வாங்கிய சீட்டுகளை ஒரு நினைவிற்காக சேர்த்து வைத்தேன். ஒரு வரலாற்று ஆவணம். சுமார் 10 இருக்கும்.. ஏலம் விட ஆசை.. யார் வாங்குவார்... விலை குறிங்க என்னுடைய இன்பாக்சிற்கு தகவல் அனுப்புங்கள். முடிவான தொகை நிர்ணயமானதும்.. பிரேம் செய்து தலைவரின் கையால் பெற்றுக்கொள்ளுங்கள்.. தொகையை சமூக பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் ஞான சௌந்தரி அம்மாள் அவர்களை இருட்டடிப்பு செய்தது யார்...?
கௌதம சன்னா
அன்னை ஞான சௌந்தரி அம்மாள் |
இந்தி எதிர்ப்பு என்றாலே யாவருக்கும் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாண்ட நடராசன் தாளமுத்து ஆகியோரைத் தான் நினைவுக்கு வரும். ஆனால் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965ஆம் ஆண்டு தொடங்கியபோது அதில் முன்னணியில் நின்று போராடி எல்லோரையும் விட அதிக மாதங்கள் சிறையில் இருந்த ஒரே வீர அன்னை சௌந்தரி அம்மாள் அவர்களை யாருக்கும் தெரியாது.. காரணம் அவர் மறைக்கப்பட்டதுதான். எல்லோரும் ஆறு மாதங்கள் சிறையில் இருந்த போது இவர் மட்டும் 8 மாதங்கள் சிறையில் இருந்தார். அந்த காலத்தில் ஒரு பெண் 8 மாதங்கள் சிறையிலிருப்பது எளிதான காரியமா..? அது மட்டுமின்றி நாடறிந்த முக்கியமான பெண் தலைவர் அவர்.
இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பலனை திமுக அறுவடை செய்தது. ஆரம்பத்தில் அது மாணவர் போராட்டம் என்று சம்பத்தம் இல்லாமல் இருந்த திமுகவை மாணவர்கள் போராட்டக் களத்திற்கு இழுத்து வந்தார்கள். அதன் விளைவாய் திமுக தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சியமைத்தது.
மாவீரர்.ஆரிய சங்காரன் படுகொலை..?
முன்னும் பின்னும்.
கௌதம சன்னா
மாவீரர்.ஆரிய சங்காரன் மறைவதற்கு முன்..அகில இந்திய கட்சியான குடியரசு கட்சியுடன் திமுக கூட்டணி வைத்து 1962ல் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. அகில இந்திய தலைவர் தந்தை சிவராஜ் அவர்கள் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிவு வந்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், நாடாளுமன்ற வேட்பாளர் தந்தை சிவராச் தோல்வியடைந்தார். ஆனால் அந்த தொகுதிக்கு உள்பட்ட ஆறு சட்ட மன்ற தொகுதிகள் அனைத்திலும் திமுக வென்றது. இது அப்பட்டமான துரோகம் என்பது அனைவருக்கும் தெரிந்து போனது. கூட்டணித் தலைவரையே தோற்கடித்த பெருமை திமுகவையே சாரும். அதனால் ஆரிய சங்காரன் கொதித்து போயிருந்தார்.
அதே நேரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வரும் எதையும் அவர் கடுமையாக எதிர்த்தார். அவரது அறிக்கைகள் துண்டு பிரசுரங்கள் படிக்கும் போது ரத்தம் சூடேற்றும் வகையில் இருந்தன.
சங்காரன் மறைந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற எம்சியார் அவர்கள் சங்காரனின் மரணத்தைப் பற்றின சந்தேகத்தை எழுப்பினார். அதை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
அவர் நடத்திய ஆரிய சங்காரன் என்ற பத்திரிக்கையின் முகப்பை இங்கே இருக்கிறது, அதில் "தீவிர இதழ்" என்று அறிவித்து நடத்தினார். அந்த துணிச்சல் அசாத்தியமானது.
தலித் அமைப்புகளுடன் கூட்டமைத்து அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்வு துண்டறிக்கைகள் இங்கே உள்ளன..
தலித் மக்களின் வரலாற்றை சிதைத்த துரோகப் பக்கங்களை இனி நீங்கள் தொடர்ந்து காணலாம்.. ஆதாரங்களுடன் வெளிவரும்..பரப்புவது உங்கள் வேலை..
உங்கள் லைக் -கினால் எந்த பயனும் இல்லை, அதை நான் விரும்பவும் இல்லை.பரப்ப ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடருங்கள்
Subscribe to:
Posts (Atom)