Sunday, 10 April 2016

மேயர் என்.சிவராஜ் உருவாக்கிய மக்கள் விளையாட்டரங்கம், நேரு விளையாட்டரங்கமாக மாறின கதை


முதல்வர் ஜெயலலிதாவின் ஆணவ சான்று...

கௌதம சன்னா
 
பேராசிரியர் என் சிவராஜ்
புரட்சியாளர் அம்பேத்கருக்குப் பிறகு அகில இந்திய அளவில் தலித் மக்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கியவர் தந்தை என்.சிவராஜ் அவர்கள். அவர் பல்வேறு பதவிகளை வகித்தவர். வழக்கறிஞர். சென்னை சட்டக்கல்லூரியின் பேராசிரியர், அகில இந்திய அட்டவணைச் சாதிகள் கூட்டமைப்பின் தலைவர். அம்பேத்கர் உருவாக்க முயன்ற இந்திய குடியரசு கட்சியை உருவாக்கி இந்தியா முழுமைக்கு வளர்த்தவர். சென்னையில் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளுள் ஒருவர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தந்தை சிவராஜ் அவர்கள் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும் பின்பு மேயராகவும் பதவி வகித்தவர்.

Tuesday, 22 March 2016

பெரியார் பட்டம் குறித்து - மீனாம்பாள் சிவராஜ் அவர்களுடன்... ஒரு நேர்முகப் பேட்டி


அன்னை மீனாம்பாள்


அன்னை மீனாம்பாள் அவர்கள் இந்திய அளவில் அறியப்பட்ட பெண்ணியத் தலைவர். இவரது கணவர் ந.சிவராஜ் அவர்கள் இந்திய குடியரசுக் கட்சியின் அகில இந்தியத் தலைவர். டாக்டர் அம்பேத்கருக்குப் பிறகு மக்களை வழிநடத்தியவர். அன்னை மீனாம்பாள் அவர்களின் பேட்டி ஒன்று இங்கே இடம் பெறுகிறது. நீதி கட்சி பவளவிழா மலரின் இடம் பெற்ற அந்தப் பேட்டியில் இரண்டு முக்கியமான நிகழ்வுகளை விளக்குகிறார். 1. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், 2. ஈ.வெ.ராமசாமி அவர்கள் பெரியார் பட்டம் பெற்று அது முதல் பெரியார் என அழைக்கப்பட்ட வரலாறு. வாசகர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.                      -கௌதம சன்னா

Sunday, 6 March 2016

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தொடங்கி வைத்தது யார்…?

சுதேசமித்திரன் வெளியிட்ட புகைப்படம்
அதில் இந்தி எதிர்ப்பாளர் கோஷ்டியின்
 தலைவர் என்பதை குறிப்பிட்டிருப்பதை
கவனிக்கவும்
ஈவெரா அவர்களை பெரியார் என அழைக்கக் காரணம் யார்..?
அகில இந்தியாவிற்குமான முதல் தலித் பெண் தலைவர் யார்..?

முதல் இந்தி எதிர்ப்பு • சென்னை மாகாண பிரதம அமைச்சர் ராஜாஜி 1937 ஆகஸ்ட் 10ம் நாளன்று இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார். அது மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் அது ஒருங்கிணைக்கப்படவில்லை இதை பயன்படுத்திக் கொண்ட ராஜாஜி 21.04.1938 அன்று ஓர் ஆணையை பிறப்பித்து பள்ளிகளில் கட்டாய இந்தி மொழியைக் கட்டாயமாக்கினார். எல்லோரும் கொதித்தார்கள். ஆனால் யார் தொடங்குவது என்பதில் ஏனோ தயக்கம் இருந்தது. இந்த தயக்கத்தை முதலில் உடைத்தவர் அன்னை மீனம்பாள் அவர்கள். (காண்க பேட்டி). அதன் தொடர்ச்சியாய் சென்னை தி.நகரில்
நடத்தப்பட்ட முதல் இந்தி திணிப்பு எதிர்ப்புக் கூட்டம் தந்தை சிவராஜ் தலைமையில் நடந்தது. அந்த வரலாற்றுக் சிறப்புமிக்க கூட்டத்தையும் போராட்டதையும் தனது வீர உரையால் தொடங்கி வைத்தவர் அன்னை மீனாம்பாள் அவர்கள். (கொடுக்கப்பட்ட படத்தில் தி நகரில் நடைபெறும் முதல் இந்தி எதிர்ப்பு கூட்ட மேடையில் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தந்தை சிவராஜ். கீழே அமர்ந்திருப்பவர் அன்னை மீனாம்பாள், மைக் முன் பேசுபவர் சி.என்.அண்ணாதுரை அவர்கள்)