மரிய இருதயம் இரண்டு முறை உலக கேரம் சாம்பியனாக இருந்தவர். ஆனால் அவரைப் பற்றின எந்த செய்தியும் அன்றைய ஊடகங்கங்கள் கண்டுக்கொள்ளவே இல்லை. முற்போக்கு திராவிட அரசுகள் செஸ் சாம்பியனுக்கு அளவில்லாமல் வாரி வழங்கிய காலத்தில்தான் மரிய இருதயமும் சாம்பியன் ஆனார். ஆனால் அவரை கண்டுக்கொள்ளவே இல்லை.
ஸ்போர்ஸ் ஸ்டார் இதழ் சிறு துணுக்கு செய்தியை மட்டும் வெளியிட்டது. உலக சாம்பியனுக்கு தனது அட்டையில் இடம் அளிக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில்தான் நான் 1997ஆம் ஆண்டு எழுச்சி மாத இதழில் அவரின் பேட்டியை போடுவதற்காக வேப்பேரியில் இருந்த அவரது வீட்டில் சந்தித்தேன். மிக நீண்ட உரையாடல். கேரம் உலகப் போட்டியில் அவர் படைத்த சாதனை, அவர் சந்தித்த சவால்கள், புறக்கணிப்புகள், சாதிய பாகுபாடுகள் என விலாவாரியாக மனம் திறந்துப் பேசினார். தமிழக அரசின் புறக்கணிப்பு மனதினை மேலும் புண்ணாக்கிவிட்டது என்ற நொந்துக் கொண்டார். உண்மையில் தனித்து விடப்பட்ட உலக சாம்பியனின் மனக்குமுறல்கள் அந்த பேட்டியில் பதிவானது கொஞ்சமே.
பேட்டி முடிந்தப் பிறகு அவருடன் ஒரு வட்டம் கேரம் ஆடினேன். மறக்க முடியாத நிகழ்வு. உலக சாம்பியனோடு நானும் ஆடினேன். பெருந்தன்மையோடு எனது விருப்பத்தை நிறைவேற்றினார்.
எனினும் மரிய இருதயத்திற்கு நேர்ந்த புறக்கணிப்பு ஒரு உலக சாம்பியனுக்கு நிகழ்ந்த புறக்கணிப்புத்தான். அதுவும் இந்த மண்ணில்தான் நிகழ்ந்தது. யாருயை மண்..?
பேட்டியின் முழுவிவரத்தை எழுச்சி மாத இதழில் யாராவது பார்த்தால் பதிவிடுங்கள். முக்கியமான மு.ப.எழிலரசு அவர்களின் மகன்கள்..
மரிய இருதயம் - தலித் குடிகளில் கிறித்துவ ஆதி திராவிடர். அசல் மெட்ராஸ்காரன்.
காலம் அவரை பதிவு செய்யும்.. ஆவணப்படம் எடுத்தால் உதவத் தயார்.
சன்னா
No comments:
Post a Comment