Sunday, 6 March 2016

இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் ஞான சௌந்தரி அம்மாள் அவர்களை இருட்டடிப்பு செய்தது யார்...?

கௌதம சன்னா

அன்னை ஞான சௌந்தரி அம்மாள்
இந்தி எதிர்ப்பு என்றாலே யாவருக்கும் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாண்ட நடராசன் தாளமுத்து ஆகியோரைத் தான் நினைவுக்கு வரும். ஆனால் இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965ஆம் ஆண்டு தொடங்கியபோது அதில் முன்னணியில் நின்று போராடி எல்லோரையும் விட அதிக மாதங்கள் சிறையில் இருந்த ஒரே வீர அன்னை சௌந்தரி அம்மாள் அவர்களை யாருக்கும் தெரியாது.. காரணம் அவர் மறைக்கப்பட்டதுதான். எல்லோரும் ஆறு மாதங்கள் சிறையில் இருந்த போது இவர் மட்டும் 8 மாதங்கள் சிறையில் இருந்தார். அந்த காலத்தில் ஒரு பெண் 8 மாதங்கள் சிறையிலிருப்பது எளிதான காரியமா..? அது மட்டுமின்றி நாடறிந்த முக்கியமான பெண் தலைவர் அவர்.
இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பலனை திமுக அறுவடை செய்தது. ஆரம்பத்தில் அது மாணவர் போராட்டம் என்று சம்பத்தம் இல்லாமல் இருந்த திமுகவை மாணவர்கள் போராட்டக் களத்திற்கு இழுத்து வந்தார்கள். அதன் விளைவாய் திமுக தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சியமைத்தது.

ஆனால் தேர்தல் வெற்றிக்கு காரணமானவர்களை அது வழக்கம்போல மறந்தது. அதில் மிக முக்கியமானவர் பெண்ணிய போராளி தலைவர் அன்னை சௌந்தரி அம்மாள்.

தளபதி ஆரிய சங்காரன் அவர்கள் நடத்திய
 ஆரிய சங்காரன் இதழினி முகப்பு, அதில்
ஞான சௌந்தரி அவர்களைப் பற்றின செய்தி

அம்பேத்கர் தொடங்கிய செட்யூல் காஸ்ட் பெடரேசனில் தீவிரமாக பணி செய்தாலும் பெரியாரின் கொள்கைகளில் பிடிப்போடு இருந்தார். பெரியாரின் தாலி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் களப்போராளி அன்னை சௌந்தரி அம்மாள். ஏனென்றால் பெரியார் பேசியதை அவரது தொண்டர்களே நடைமுறைப்படுத்த தயங்கியபோது பெரம்பூர் சாலையில் உள்ள கர்னாடிக் மில் குடியிறுப்பு அருகில் பெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதற்கு பெரியாரை தலைமைத்தாங்க அழைத்தார் அவரும் சம்மதித்தார். கூட்டத்தின் நோக்கமே தமது கணவர் அமிர்தவாசகம் அவர்களின் முன்னிலையில் தாலியை அறுத்தெறிவதற்காகத்தான். ஆனால் பெரியார் சிறை சென்றதால் வரமுடியாமல் போனது. எனினும் திட்டமிட்டபடி உறவினர்களின் தடைகளை மீறி தனது தாலியை மேடையில் அறுத்தெறிந்து பெண்ணுரிமை பிரகடனம் செய்தார்.

இப்படி பல்வேறு போராட்ட வரலாற்றைக் கொண்ட அன்னை சௌந்தரி அம்மாளை ஆதிதிராவிடப் பெண்மணி என்கிற காரணத்தினால்தான் இருட்டடிப்பு செய்தார்கள் என்று ஆரிய சங்காரன் குற்றம் சாட்டினார்.

தலித் முன்னோடிகள் கண்ட போராட்ட களங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் அவர்களின் போராடியதால் கிடைத்த அனுகூலங்களை யார் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதை கூறுங்கள்.. பதிவிடுங்கள்.

No comments:

Post a Comment